முகக்கவசம் கட்டாயமா?- அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. வீரியமில்லாத கொரோனா வைரஸ் இதுவரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனாவை விட மிகமோசமானது வதந்தி தான். அதனை அதிகம் பகிர வேண்டாம்" என தெரிவித்தார்
Tags :