தீபாவளி திருநாள் கோலகலாமாக மக்கள் கொண்டாட்டம்

by Admin / 24-10-2022 03:42:43am
தீபாவளி திருநாள் கோலகலாமாக மக்கள் கொண்டாட்டம்


இந்தியா முழுவதும் இன்று தீப திருநாள் கொண்டாட்டம் .ஏழை-பணக்காரன் என்கிற  எந்தவித பாகுபாடுமற்ற நிலையில் புத்தாடை அணிந்து,இனிப்பு பலகாரங்கள் செய்து இறைவனை வழிபட்டு ,அக்கம்பக்கத்தினருடன் தம்வீட்டில் செய்தபலகாரங்களை வழங்கி ,மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. நரகாசூரனை அழித்து கொண்டாடப்படும் மதம் சார்ந்த பண்டிகை என்று  சொன்னாலும்  மனிதம் சார்ந்த.. .மனிதநலன்  காக்க தீயவர்களை அழித்து அனைவரும்  மகிழ்ச்சியாக வாழ வழி வகை செய்யும்  திருவிழா  என்பதனாலேயே,  மக்கள் தலைமுறை .தலைமுறையாக கொண்டாடி  வருகின்றனர். இன்றைக்கு பல கிராமங்களில்  உள்ளவர்களுக்கு  தீபாவளி அன்று தான் புத்தாடையும்  நல்ல சாப்பாடும் கிடைக்கிறது  என்பது  நிதர்சனம்.மனித சந்தோஷத்தை  வழங்கும்  எல்லாப்பண்டிகையும் உன்னதமானது.

 

Tags :

Share via

More stories