உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு- முதலமைச்சர் மு.கஸ்டாலின்.
இளைய உலக செஸ் சாம்பியனாக குகேஷ் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ்நாடும் ஆந்திராவும் சொந்தம் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது .சிங்கப்பூரில் நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின்அவரை பாராட்டியதோடு தம் சமூக வலைதள பக்கமான எக்ஸில்,. தமிழ்நாடு உலகளாவிய சதுரங்க தலைநகரம் என்ற நிலையை உறுதிப்படுத்தியது என்று அறிவித்தார்.குகேஷ் கழுத்தில் தங்கப் பதக்கத்தை அணிவிப்பது போன்ற புகைப்படத்தில் வெளியிட்டதோடு தமிழ்நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று குறிப்பிட்டு 18 வயதில் உலகசை சாம்பியன் ஆனதற்கு வாழ்த்துக்கள் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை தொடர்வதோடு சென்னை மற்றொரு உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திர பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு எங்கள் சொந்த தெலுங்கு பையன் .இந்திய கிராண்ட் மாஸ்டர் உலகின் எளிய செஸ் சாம்பியன் ஆக சிங்கப்பூரில் வரலாறு எழுதியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசம் கொண்டாடுகிறது. வரும் காலங்களில் ,நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன் என்று தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள . டி.குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Tags :