இரண்டாம் தேதி மதியம் 3:30 மணி அளவில் ,இந்த இரண்டாவது டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது.

by Admin / 27-06-2025 04:18:35pm
இரண்டாம் தேதி மதியம் 3:30 மணி அளவில் ,இந்த இரண்டாவது டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது.

இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை இதுவரை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

தனிப்பட்ட வீரர்களின் ரங்கள் குவிப்பு ஒருபுறம் இருந்தாலும் ஒட்டுமொத்தமான வீரர்களின் கூட்டு பங்களிப்பின் மூலமாக பெறப்படுவது தான் வெற்றி. தனிநபர் வெற்றியை விட அணியின் உடைய வெற்றி முக்கியம் என்பதால் ரசிகர்கள் இந்திய அணி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் தொடர் ஜூலை இரண்டாம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரை நடைபெறுகிறது 

இங்கிலாந்தின் பர்னிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி மதியம் 3:30 மணி அளவில் ,இந்த இரண்டாவது டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. கருத்துக் கணிப்பின்படி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்று 59 விழுக்காடு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது இந்திய அணி 29 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் டிராவில் 12 சதவீதம் முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via