திருச்சி-சார்ஜா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; 2.35 மணிநேரம் பயணிகள் தவிப்பு

by Editor / 12-10-2024 12:43:08am
திருச்சி-சார்ஜா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; 2.35 மணிநேரம் பயணிகள் தவிப்பு

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதனால், விமானம் சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக   வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடந்தது.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. இதனால், 2.35 நிமிடங்களாக விமானத்தில் பயணிகள் இருந்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

விமானியின் சாமர்த்தியம் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

 

Tags : திருச்சி-சார்ஜா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; 2.35 மணிநேரம் பயணிகள் தவிப்பு

Share via