நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து . தேர்தல் ஆணையம் உத்தரவு

by Admin / 16-03-2026 06:36:40pm
நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து . தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி நேற்று அமுலானதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இன்று ஈரோடு, கரூர், நாகப்பட்டினம் ,விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நான்கு மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்;

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர்- டி .என் .ஹரிஹரன் பிரசாத்,

ஈரோடு -டி.வி. கிரண் சுருதி,

நாகப்பட்டினம் -சுஜித் குமார்,

விருதுநகர்- என் ஸ்ரீநாதா.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி இன்று மாலை 3.00 மணிக்குள் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Tags :

Share via