ரூ.30 லட்சத்துக்காக தாயைக் கொன்று குளியலறையில் புதைத்த கொடூரம்

by Staff / 11-05-2024 01:56:54pm
ரூ.30 லட்சத்துக்காக தாயைக் கொன்று குளியலறையில் புதைத்த கொடூரம்

மத்தியப்பிரதேசத்தில் தாயின் பெயரில் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.30 லட்சம் பிக்சட் டெபாசிட் தொகை பெற இந்த கொடுஞ்செயலை செய்துள்ளார். உஷா (65) என்ற மூதாட்டி கொல்லப்பட்டு குளியலறையில் புதைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தீபக் பச்சௌரியை (24) போலீசார் கைது செய்தனர்.தனது தாயை காணவில்லை என மகன் நேற்று போலீசில் புகார் செய்திருந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இளைஞர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, ​​தீபக் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அவர் ஷேர் மார்க்கெட்டில் ரூ.15 லட்சத்தை இழந்துள்ளதையும், பணத்தேவையில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், விசாரணைக்காக வீட்டிற்கு வந்த போலீசார் குளியலறையில் புதிதாக கட்டப்பட்ட பகுதியைக் கண்டுபிடித்தார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் உஷாவின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.உஷாவும் அவரது கணவர் புவேந்திர பச்சௌரியும் 23 ஆண்டுகளுக்கு முன்பு தீபக்கை அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்தனர். 2021ல் புவேந்திரா இறந்த பிறகு உஷாவும், தீபக்கும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர்.

 

Tags :

Share via