குறுகிய  துாரம் செல்லும் ஏவுகணை சோதனை...வெற்றிகரமாக நடத்தி முடித்த வட கொரியா...

by Admin / 01-10-2021 12:20:29am
குறுகிய  துாரம் செல்லும் ஏவுகணை சோதனை...வெற்றிகரமாக நடத்தி முடித்த வட கொரியா...வட கொரியா  மீண்டும் குறுகிய துாரம் செல்லும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை உட்பட மூன்று ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இந்நிலையில் நேற்று குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா ஏவி சோதித்தது. மலைப் பிரதேசமான ஜகாங் மாகாணத்தில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கிழக்கு கடல் பகுதியில் சென்று விழுந்துள்ளது.
 
இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சமரச பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக இதுபோன்ற ஏவுகணை சோதனை நடத்துவது சரியல்ல என, தென் கொரியா தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via