பாரதிதாசன் பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் நாளை ஒத்திவைப்பு -

by Editor / 09-12-2022 09:08:52am
 பாரதிதாசன் பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் நாளை ஒத்திவைப்பு -

மாண்டஸ் புயல் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ தேர்வுக்குரிய எழுத்து தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது.இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இதனை தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 106 உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் அறிவிப்பு.

 

Tags :

Share via

More stories

Logo