தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சியில்மாற்றம் கிடையாது-கல்வி.அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ச்சியாக தேர்வு பெறுகிற முறைக்கு மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தேர்ச்சி முறை கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்கள் ஆறு மாதத்திற்கு உள்ளாக மறு தேர்வு எழுதி வெற்றி பெறுவதன் மூலமாக அவர்கள் அடுத்த ஆண்டிற்கான பழுப்பை தொடர வேண்டும் என்று மத்தியஅரசு செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இதற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் முன்பிருந்தது போன்று தேர்ச்சியில் எந்த விதமான மாற்றமும் கிடையாது என்றும் அது மத்திய அரசு நிர்வகிக்கக்கூடிய நவோதயா போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பதிலளித்துள்ளார்.
Tags :