அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது -செல்வப்பெருந்தகை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால், கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாகத் தான் பிரதமர் மோடி ஆட்சியில் அடக்குமுறைகள் ஏவி விடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காபந்து சர்க்காராக செயல்பட வேண்டிய மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. மோடியின் அடக்குமுறையை 'இந்தியா' கூட்டணி ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags : அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது -செல்வப்பெருந்தகை