விஜய் அரசியல் வருகை.. சீமான் கருத்து

by Staff / 02-02-2024 03:36:14pm
விஜய் அரசியல் வருகை.. சீமான் கருத்து

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார். அவரின் அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். தமிழக வெற்றி கழகம், என்கிற பெயர் நன்றாகவே இருக்கிறது, வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அவருக்கான வாக்களர்கள் அவருக்கு, எனக்கான வாக்காளர்கள் எனக்கு என சீமான் கூறி இருக்கிறார்.

 

Tags :

Share via