ஆதார்-பான் இணைப்பு கட்டாயம்  30-க்குள் பதியாவிட்டால் அபராதம்

by Editor / 15-06-2021 04:50:15pm
ஆதார்-பான் இணைப்பு கட்டாயம்  30-க்குள் பதியாவிட்டால் அபராதம்



கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே  இணைத்துக் கொள்ளுங்கள். ஆதார்-பான் இணைக்கப்பட்டுவிட்டதா? என்பதை  செக் பண்ணலாம்.
முதலில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.அதில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண்களைப் பதிவிட வேண்டும்.
பதிவிட்ட பின்னர் view Link Aadhar status என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.ஆதார் அட்டையும், பான் கார்டையும் SMS மூலமாகவே மிக எளிதாக இணைத்து விடலாம்.567638 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு SMS அனுப்புவதன் மூலம் இணைக்கலாம். வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது செல்போன் நம்பரிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மேலே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

 

Tags :

Share via