திரிபுராவில் பாஜக வெற்றி: முதல்வராக மாணிக் சாஹா இன்று பதவியேற்பு
திரிபுராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா இன்று பதவியேற்கிறார். அகர்தலாவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். அம்மாநிலத்தில் மாணிக் சாஹா தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். நேற்று நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் புதிய அரசு நேற்று பதவியேற்றது.
Tags :



















