உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா

உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா சுட்டாலா பதவியேற்கவுள்ளார். அவர் ஜூன் 2ஆம் தேதி நியமிக்கப்படுவார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார். 63 வயதான அஜய்பால் சிங் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக்கில் துணைத் தலைவராக உள்ளார். அவர் 11 ஆண்டுகள் மாஸ்டர்கார்டின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். புனேவில் உள்ள காட்கி கண்டோன்மென்ட்டில் பிறந்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டமும், அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
Tags :