சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்

by Staff / 04-05-2023 11:40:37am
சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல நடிகர் சரத் பாபு (71) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஹைதராபாத்தின், கச்சிபௌலி ஏஐஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பதால் விரைவில் குணமடைவார் என மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இதற்கிடையில் சரத்பாபு இறந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அப்படி எதுவும் இல்லை என அவரது சகோதரி விளக்கம் அளித்துள்ளார். பெரும்பாலான ரஜினி படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் சரத்பாபுவின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும்.

 

Tags :

Share via