பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த 3பேர் கைது

by Editor / 16-06-2025 05:27:58pm
பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த 3பேர் கைது

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார்  தலைமையில் குமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறிவைத்து   அவர்களிடமிருந்து  பர்ஸ்.செயின். ஆகியவைகளை தொடர்ந்து பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல காந்தி நகர் பகுதியில் சேர்ந்த  விஜயா. மஞ்சு அரவிந்த். ஆகியோர்களை உதவி காவல் ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் காவலர்கள் அவர்களிடமிருந்து 27பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்ய தனி காவலர்களை நியமித்ததன் மூலம் இது போன்ற  பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  அவர்களுக்கு பொதுமக்கள்  வெகுவாக பாராட்டியும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்

 

Tags :

Share via