நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு அழைத்துவர திட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த தகராறில் கைது செய்யப்பட்ட பிரதாப் என்பவரிடம் நடந்த விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீகாந்திடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்தில் எடுக்கப்படவுள்ளார். கிருஷ்ணாவை விசாரணைக்கு அழைக்க போலீசார் நேரில் சென்றபோது, அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கேரளாவுக்கு சென்று கிருஷ்ணாவை நேரில் அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.
Tags :