ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவு.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் ’பெல்ட்’ பகுதிகளில் பட்டா வழங்கக் கூடாது என்று 1962 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பட்டா பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் பிற மாநகராட்சிகளில் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
Tags : ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவு.