தாக்குதலுக்கு உள்ளான எஸ்.ஐ. மரணம் - 2 பேர் கைது

சென்னையில் போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளான ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில், 2 பேர் கைதாகியுள்ளனர். எஸ்.ஐ ராஜாராமனை எழும்பூர் மருத்துவமனை அருகே மீது கடந்த 18ஆம் தேதி இருவர் சரமாரியாக தாக்கினர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் ராஜாராமனின் நண்பர்களான ராகேஷ், சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags :