லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மண் அல்ல வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. கனிமவளத்துறை அதிகாரியிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து மண் அள்ளப்படுவதால் வளங்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம்- கீரனூர் சாலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளி செல்லும் கனரக வாகனங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி மணல் அள்ளி வந்த லாரிகளை விவசாயிகள் சிறை பிடித்து வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
Tags :