விருதுநகர் திமுக பிரமுகர் கட்சியை விட்டு தற்காலிக நீக்கம்.

by Admin / 22-03-2022 10:02:43pm
விருதுநகர்  திமுக பிரமுகர் கட்சியை விட்டு தற்காலிக நீக்கம்.

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் முக்கிய நபரான ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது உட்பட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் தொடர்புடைய  திமுக பிரமுகரான ஜூனைத் அகமது வை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  அனைத்து பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அறிவித்துள்ளார்.
 

 

Tags : Temporary dismissal from Virudhunagar DMK Pramukar Party.

Share via