அதிமுக கவுன்சிலர்கள் தன்னை நகர்மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் நகர மன்ற தலைவி புகார்.

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்ததன் காரணமாக அதிமுக கவுன்சிலர்கள் தன்னை நகர்மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் இம்சை செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டை நகர மன்ற தலைவி புகார்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நேற்று மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவரை அலுவலகத்தில் இருந்து விரட்டி சென்று கடுமையாக பேசிய காட்சிகள் வைரலாகியது.
இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் நேரடியாக சந்தித்து நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து நகர் மன்ற தலைவர் ராமலக்ஷ்மி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தான் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்ததன் காரணமாக அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தன் மீது ஆபாசமான வார்த்தைகளை பேசுவது உடன் தன்னை தன் அலுவலகத்தில் நுழைய விடாமல் கடந்த கூட்டத்தின் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர். அந்த வகையில் அதிமுக கவுன்சிலர்கள் தன்னை செயல்பட விடாமல் தொடர்ந்து இம்சை செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
Tags : அதிமுக கவுன்சிலர்கள் தன்னை நகர்மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் நகர மன்ற தலைவி புகார்.