கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் -குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி.எச்சரிக்கை
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனாப்பேரி பகுதியில் கேரளாவிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் கடத்திவந்து கொட்டிய வீரசிகாமணி மேட்டு தெருவைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் வேல் முருகன் என்பவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில்,புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி ஆலோசனைப்படி புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தலைமை காவலர்கள் விஜயபாண்டி, மதியழகன், சிவராம கிருஷ்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் டிப்பர் லாரிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் மேற்படி வேல்முருகன் மீது சேர்ந்தமரம் சொக்கம்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில்பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கடத்தி வந்து தென்காசி மாவட்டத்தில் கொட்டும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags : Medical waste from Kerala - Arrest under Thugs Act SP Warning