மருத்துவமனையின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

by Editor / 13-06-2021 10:42:24am
மருத்துவமனையின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான பேர் பலியாகி உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சிரியா நாட்டின் மருத்துவமனைகள் மீது 400க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிரியா அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் தான் இது போன்ற செயல்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள மருத்துவமனைகளில் தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இதுபோன்ற தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவின் ஆப்ரின் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மீது தற்போது குர்திஷ் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் நோயாளிகள் உட்பட பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via