பகுதி நேர ஆசிரியர்கள் மாத சம்பளத்தை 2500 ரூபாய் அதிகரித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிவுடன் பகுதி நேர ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ...பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2500 ரூபாய் அதிகரித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நம் ஆட்சி அமைவதற்கு முன்னால் 5000 ரூபாய் ஊதியம் பெற்று வந்தவர்கள் படிப்படியாக இப்பொழுது பனிரெண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது 2500 ரூபாய் அதிகரித்து 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்து உள்ளோம். .ஆசிரியர்கள் இந்த குறைந்த ஊதியத்தில் வைத்து எப்பொழுது குடும்பம் நடத்த முடியும் என்று அரசுக்கு தெரிந்ததினால் தான்.. இப்பொழுது அவர்கள் ஊதியத்தை நாங்கள் அதிகரித்திருக்கிறோம் மத்திய அரசு நமக்கு தர வேண்டிய 3,500 கோடி ரூபாய் இன்னும் தராததால் நம்மால் சில செயல்களைச் செய்ய முடியவில்லை. என்றும் பகுதி நேர ஆசிரியர்களின் இறந்த_ 200 குடும்பங்களுக்கும் நமக்காக உழைத்த எதையாவது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் முதலமைச்சர் சொல்லி இருந்தா அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது அரசு செய்யும்.என்றும் தெரிவித்தார்.
Tags :


















