ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

by Staff / 08-12-2023 02:26:17pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆந்திராவை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மண்டபேட்டையை சேர்ந்த ஒரு குடும்பம் வாரணாசியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அறையை விட்டு நீண்ட நேரம் வெளியே வராததால் ஆசிரம ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் முன்னிலையில் அறையின் கதவுகளை திறந்து பார்த்தபோது, ​​உடல்கள் அனைத்தும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன. பணப்பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo