வனுவாட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Staff / 08-12-2023 02:27:46pm
வனுவாட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இசாங்கல் நகருக்கு தெற்கே 123 கிமீ தொலைவில் 48 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் உடைமை சேதங்கள் குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

 

Tags :

Share via