இனியாவது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - இபிஎஸ்

by Staff / 19-02-2025 05:02:45pm
இனியாவது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல் உள்ளது. திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் இருக்கும். இனியாவது பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via