புளியங்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை  

by Editor / 19-07-2023 06:36:47pm
புளியங்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை  

புளியங்குடியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  ஆசிரியர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள்  இவரது கணவர் கருப்பசாமி இறந்துவிட்ட நிலையில் இவர் தனது மகள் முனீஸ்வரி என்ற முகிலாவுடன் வசித்து வருகிறார்  முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
  இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முனீஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து  அருகில் உள்ளவர்கள் புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

 

Tags :

Share via

More stories