அக்டோபர் 1ஆம் தேதி முதல்  செக்புக் செல்லாது: இந்தியன் வங்கி

by Editor / 18-08-2021 06:54:57pm
அக்டோபர் 1ஆம் தேதி முதல்  செக்புக் செல்லாது: இந்தியன் வங்கி

அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கியின் பழைய செக் புக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஏற்கனவே பழைய செக்புக் வைத்திருந்தால் அதனை உடனே வங்கிகளில் கொடுத்து புதிய செக்புக் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதனை ஆன்லைன் மூலமும் புதிய செக்புக் வாங்கி கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது புழக்கத்தில் இருக்கும் செக்புக் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் பயன் படுத்த முடியாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அந்த செக் திருப்பி அனுப்பப்படும் என்றும் வங்கி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் இருக்கும் இந்தியன் வங்கி கிளைக்கு சென்று புதிய செக்புக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவும் என்றும், அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் புதிய செக்புக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்த தகவல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது என்றும், புதிய செக்புக் விண்ணப்பித்த வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக செக்புக் வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via