எஸ்.பி.ஐ. வங்கியில் சேலரி கணக்கு  வைத்திருந்தால் ஏராள சலுகைகள் 

by Editor / 18-08-2021 06:57:27pm
எஸ்.பி.ஐ. வங்கியில் சேலரி கணக்கு  வைத்திருந்தால் ஏராள சலுகைகள் 


ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியருக்கு அவருடைய சம்பளத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக சேலரி கணக்குகள் தொடங்கப்படுவது தெரிந்ததே. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வங்கிகளில் சேலரி கணக்கு வைத்திருக்கும் நிலையில் எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருந்தால் ஏராளமான சலுகைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 


எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசதி பெரும்பாலான வங்கிகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் எதிர்பாராதவிதமாக சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களுக்கு 30 லட்சம் வரை எஸ்பிஐ வங்கி காப்பீடு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் என அனைத்து வகை கடன்களுக்கும் 30% செயல்பாட்டு கட்டணம் சேலரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓவர் டிராப்ட் வசதி உண்டு என்பதும் லாக்கர் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் சேலரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீங்கள் வேறு வங்கியில் சேலரி கணக்கு வைத்திருந்தால் அக்கவுண்ட்டை எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுவதற்கு உங்கள் நிறுவனத்தின் எச்.ஆரை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via