எம்பிஏ மற்றும் எம்சிஏ மேற்படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...

by Admin / 11-08-2021 12:00:31pm
எம்பிஏ மற்றும் எம்சிஏ மேற்படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...

எம்பிஏ மற்றும் எம்சிஏ போன்ற மேற்படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை & அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும்  MBA மற்றும் MCA படிப்புகளில் சேர விரும்புவோர்,  www.gct.ac.in மற்றும் www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான பதிவு கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் செலுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் , சான்றிதழ் சரிபார்ப்பு கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்டவை ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories