தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய வாகன சோதனை 1835வழக்குகள் பதிவு.
தென்காசி மாவட்டத்திற்க்குட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள தென்காசி ஆலங்குளம் சங்கரன்கோவில் புளியங்குடி காவல் சப் டிவிஷன் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
மொத்தம் 121 இடங்களில் அந்தந்தபகுதி காவல்துறை ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் 4974 வாக்கங்கள் தணிக்கை செய்யப்பட்டன.இரவு 10 மணிக்கு தொடங்கி காலை வரையில் நடைபெற்றது. மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகன ஓட்டியவர்கள் தலை கவசம் இல்லாமல் வாகன ஓட்டியவர்கள் உள்பட 1835 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தகவல்.
Tags : தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய வாகன சோதனை 1835வழக்குகள் பதிவு.