28 ஜோடிகளுக்கு திருமணம்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று ஒரே நாளில் 28 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கோவில் வளாகம் உறவினர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.வைகாசி மாதத்தில் வளர்பிறை முகூர்த்தமான நேற்று அதிக அளவில் கோயில்கள் மற்றும் மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றன. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை முதல் சுப முகூர்த்த வேளையில் 28 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி அம்மன் மற்றும் ஆதி கேசவ பெருமாள் சன்னதிகளில் திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் திரண்டு வந்ததால் கோவில் வளாகம் உறவினர்களின் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.அக்னி நட்சத்திரம் முடிவடைந்து வரும் முதல் முகூர்த்தம் என்பதால், இந்நாளில் திருமணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.திருமணம் முடிந்து, பதிவு செய்த பின்னர் அடுத்தடுத்து ஜோடி, ஜோடியாக புதுமணத் தம்பதிகள் உறவினர்களுடன், கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் கோவில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.
Tags :