குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம். இது குற்றால சீசன் காலம் என்று கூறப்படுகிறது .இந்த காலங்களில் இங்குள்ள அருவிகளில் நீராடுவதற்கும் சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது இந்த ஆண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளை நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக கொட்டி வருவதால் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிக அளவில் திரண்டு உள்ளனர் அனைத்து அருவிகளையும் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் காலை முதலே குளித்து சென்று வருகின்றனர்.
Tags : குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்.