புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை

by Editor / 27-12-2023 11:22:32pm
புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை

எம்.பில் படிப்பு முடித்திருப்பவர்கள் கல்லூரிகளில் பாடம் எடுப்பதற்கு தகுதியானவர்கள் என்ற நிலை முன்னர் இருந்தது. இதனால் பெரும்பாலானோர் எம்.பில் படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வந்தனர். இதனையடுத்து ஏம்.பில் பாடம் எடுக்க தகுதியான படிப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டது. 2022-23 -ம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்து எம்.பில். படிப்பு முழுவதுமாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை மீறி சில நிறுவனங்கள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ந்தனர். தற்போது புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை

Share via

More stories