கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு.

by Editor / 27-12-2023 10:41:31pm
கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு.

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளமாநிலத்திற்கு தினமும் 500 முதல் 800 லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுசெல்லப்பட்டுவருகின்றன.இதன்காரணமாக பொதுமக்கள் பள்ளி,கள்ளூறிச்செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.இதனைத்தொடர்ந்து மாவட்டத்த்தின் பல்வேறு பகுதிகளில் இதற்க்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவருகின்றனர்.இந்தநிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்டம் கடையம் காவல் நிலையத்தில் வைத்து ஆலங்குளம்  காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னாபாஸ் முன்னிலையில் கடையம் சரகத்தில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் தனியார் நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கடையம் மெயின் ரோட்டில் பஜார் முதலியார்பட்டி, திருமலைப்பபுரம், பொட்டல்புதூர் ஆகிய ஊர் வழியாக அதிக கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதால் மாலை நேரம் சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் ஜல்லி, எம்.சாண்ட்  ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மேலும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும், மேலும் இரவு எட்டு மணி முதல் காலை 7 மணி வரையிலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட உத்தரவை மீறி கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்குவாரி மற்றும் கிரசர் தனியார் நிறுவன உரிமையாளர் ஆகியோர் ஏற்றுக்கொண்டதாக காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு.

Share via