படிக்க கூறி தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை

by Staff / 19-07-2024 04:28:41pm
படிக்க கூறி தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹடப்சர் என்ற இடத்தில் அமனோராவின் நவநாகரீக டவர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த 17ஆம் தேதி 13வது மாடியில் இருந்து குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். சிறுமியை படிக்கக்கூறி அம்மா அதட்டியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via