இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு.

by Editor / 11-08-2023 09:52:17am
இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு.

Share via

More stories