நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடி மோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால், அவர்கள் திருமணம் கருத்து முரண்பாட்டால் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்கள். இந்நிலையில் நாக சைதன்யா ஏற்கனவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், சமந்தா இயக்குனர் ராஜ் நிடி மோருவை காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. தற்பொழுது ,அவர் கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இத்திருமண நிகழ்வில், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மணப்பெண் சமந்தா பாரம்பரிய சிவப்பு நிற சேலையை உடுத்தி இருந்தார்.
Tags :


















