டிட்வா புயலின் தாக்கத்தால் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
டிட்வா புயலின் தாக்கத்தால் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கடற்கரையை ஒட்டி நின்றுள்ளது. வானிலை ஆய்வு மையம் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது .வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் .இது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்பு உண்டு.
Tags :














.jpg)



