உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டெடுப்பு

உலகின் இரண்டாவது பெரிய வைரமானது போட்ஸ்வானாவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2492 காரட் எடை கொண்ட இந்த வைரத்தை கனடாவின் லுகாரா டயமண்ட் கார்ப்பரேஷன் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து அந்த கார்ப்பரேஷன் நேற்று (ஆகஸ்ட் 22) அறிக்கை வெளியிட்டது. இந்த வைரமானது உலகின் இரண்டாவது பெரிய வைரமாகும். 1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் 3,106 காரட் கல்லினன் வைரம் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வைரமாகும்.
Tags :