4 குழந்தை மீட்பு குறித்து ஐஜி கண்ணன் பேட்டி

by Staff / 20-03-2024 01:53:41pm
4 குழந்தை மீட்பு குறித்து ஐஜி கண்ணன் பேட்டி

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளரிடம் பேசும் போது; குழந்தை கடத்தல் சம்பவம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் கடத்தல் கும்பலிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 3 குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர்கள் கண்டறியப்படாத ஒரு குழந்தையும் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு காண பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.மேலும் தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகளை பொதுமக்கள் செல்போனில் மற்றவர்களுக்கு பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் கொடுத்த தென் மண்டல காவல்துறை தலைவர் செல்போனில் வரும் தகவல் குறித்து அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வேண்டுமென அவர் கூறினார்.மேலும் இந்த கடத்தப்பட்ட குழந்தைகள் அனைத்தும் ஆலங்குளம் பகுதி அருகே குழந்தை இல்லாமல் தவித்து வந்த பெற்றோரிடம் பணத்திற்காக இந்த கடத்தல் கும்பல் விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகளை வாங்கிய பெற்றோர்கள் மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனைக்கு பின்பு தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via

More stories