திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம்

by Staff / 20-03-2024 01:40:34pm
திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம்

திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது இதன்மூலம் தெரிகிறது. இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via