நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி நிறுத்தம்

by Staff / 29-12-2022 12:54:33pm
நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட் களில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதங்களாகவே அனல் மின் நிலையத்தில் பழுது மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று காலை அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. இதனால் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தது.

 

Tags :

Share via

More stories

Logo