5 கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

by Editor / 17-06-2026 11:59:00am
5 கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் கார்கோ பிரிவில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரசாயன பவுடர் என்ற பெயரில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற இந்த போதைப்பொருளை கடத்த முயன்ற கும்பல், பிடிபடுவோம் என்ற பயத்தில் பார்சலை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo