கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.

by Editor / 24-10-2022 09:10:14am
 கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.

தமிழ்கடவுளான முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடாக புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நாளை [ 25 ம் தேதி ] காலை யாகசாலை பூஜையுடன் துவங்க உள்ளது இதையொட்டி நாளை அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படுவதுடன் முதலில் விஸவரூப தரிசனமும் பின் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதன்பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளுக்கிறார்.காலை 7.00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்சியான சூரசம்ஹாரம் 30 ம் தேதி மாலை 4 - 30 மணிக்கு நடைபெற உள்ளது கந்த சஷ்டி திருவிழா துவங்கியதும் 6 நாட்கள் ஆயிரக்கணகான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்பார்கள் இதற்காக இப்போதே பக்தர்கள் கோவிளுக்கு வர துவங்கியுள்ளனர்.

 

Tags :

Share via