பயங்கர விபத்து.. 18 பேர் பலி

உ.பி.யின் உன்னாவ் பகுதியில் புதன்கிழமை பயங்கர விபத்து நடந்தது. லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பீகாரில் இருந்து டெல்லிக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் சடலங்கள் சிதறிக் கிடந்தன.
Tags :