கேரளாவில் நிலச்சரிவில் தாய், மகன் கட்டியணைத்தபடி சடலமாக மீட்பு

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காணாமல் போன நிலையில் 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் கட்டி அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்டனர். அதையடுத்து சிறிது தூரத்தில் தாய் மற்றும் குழந்தைகள் என இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டது. இது காண்போரை கண்கலங்க வைத்தது.
மற்றொரு குழந்தை இறந்த நிலையில் தொட்டிலில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இறந்தவர்கள் பவுசியா மற்றும் அவரது மகன் அமீன் என்பதும், நிலச்சரிவில் கட்டியணைத்தபடி இறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தை பவுசியாவின் குழந்தை என்றும் மற்றொரு குழந்தை பவுசியாவின் சகோதரியின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது
Tags :